Header

ஏன் யேசுதாஸ் செல்பி எடுப்பதை எதிர்க்கிறார் – வெளியான காரணம் !

இந்தியளவில் மிகப்பெரிய பாடகராக திகழ்பவர் கே ஜே யேசுதாஸ். இவர் சமீபத்தில் தேசிய விருது விழாவில் கலந்து கொண்டு விருதை பெற்றார். அப்போது ஒரு ரசிகர் அவரிடம் செல்பி எடுக்க முயற்சித்தார், உடனே அந்த நபரிடம் செல்போன் வாங்கி செல்பி எடுத்த புகைப்படத்தை அழித்து விட்டு செலிபிஸ் என்று அந்த நபரை திட்டினார்.

இந்த செயல் சமூகவலைத்தளத்தில் மிக சர்ச்சையாக பேசப்பட்டது. ஏன் யேசுதாஸ் செல்பி எடுப்பதை எதிர்க்கிறார் என்பதை பற்றி யேசுதாஸை அறிந்த ஒரு ரசிகர் ஒரு பதிவு போட்டுவுள்ளார், அதாவது மனிதர்கள் எப்போதும் இன்னொருவரின் உதவியின்றி வாழ நினைக்க கூடாது என்பது யேசுதாஸின் எண்ணம்.

செல்பி எடுக்கும்போது கூட இன்னொரு நபர் உதவியில்லாமல் எடுக்க முயற்சிக்கிறோமே தவிர இன்னொருவரை அழைத்து புகைப்படம் எடுத்து தரச்சொல்லும் பழக்கம் குறைந்து வருகிறது.. அதை யேசுதாஸ் விரும்புவதில்லை. அதேசமயம் இன்னொரு நபர் உதவியுடன் புகைப்படம் எடுக்கும்போது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் புன்னகையுடன் போஸ் கொடுக்க அவர் தயங்குவதே இல்லையாம் என பதிவிட்டுள்ளார்.

logo