Header

பிரபல காமெடி நடிகர் விவேக்கிற்கு இப்படி ஒரு பிரச்சனையா! சர்ச்சையாக்கிய பிரபல பெண் மருத்துவர்

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடியனாக இருப்பவர் நடிகர் விவேக். காமெடியுடன் சிந்திக்கும் யுத்தியையும் மக்களிடையே புகுத்தியவர். இதனாலேயே சினிமாவில் சின்ன கலைவாணர் என பெயர் எடுத்தவர்.

அப்துல் கலாம் ஐயா பெயரில் மரங்களை நட்டு சமூக சேவையாற்றி வருகிறார். சுற்றி நடக்கும் விசயங்கள் குறித்து அவர் தன் கருத்தையும் நேரடியாக வெளிப்படுத்திவருகிறார்.

இந்நிலையில் அவர் ட்விட்டரில் கோடை காலம் என்பதால் விடுமுறையில் இருக்கும் ஆண் குழந்தைகள் அப்பாவின் தொழில் செய்யும் இடத்திற்கு சென்று எப்படி குடும்பத்திற்காக உழைக்கிறார் என கற்றுக்கொள்ளுங்கள்.

பெண் குழந்தைகள் அம்மாவிடம் சமையல் விசயங்களை தெரிந்துகொள்ளுங்கள் என கூறியுள்ளார். இதை சானலகளின் வரும் பிரபல மனநல மருத்துவர் ஷாலினி எப்படி பெண் குழந்தைகளை மட்டும் எப்படி இப்படி சொல்லலாம். ஆண் குழந்தைகள் சமைக்க கற்றுக்கொள்ள கூடாதா அல்லது பெண் குழந்தைகள் அப்பாவின் தொழிலை கற்றுக்கொள்ள கூடாதா? இது பிற்போக்கான கருத்து..

சின்ன கலைவாணர் என டைட்டில் வைத்துக்கொண்டு இப்படியா சொல்வது என கேள்வி எழுப்பியுள்ளார்.