Header

சோகத்தில் இருந்த சூப்பர் ஸ்டார் இயக்குனருக்கு நடந்த நல்ல விசயம்!

ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் அடுத்த படத்தை இயக்கவிருப்பவர் கார்த்திக் சுப்பராஜ். இளம் இயக்குனரான இவரின் ஜிகர்தண்டா படத்தை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடமுடியாது.

அதே வேளையில் இவரின் இறைவி சில சர்ச்சைகளை சந்தித்தது. சினிமாவில் சாதிப்பதற்காக வாய்ப்பு தேடி புதிகாக வரும் இளம் இயக்குனர்களுக்கு உதாரணமாய் இருப்பவர் கார்த்திக்.

லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வருவோம் என்ற ரஜினியின் ஃபேமஸ் டயலாக் போல சில நாட்களுக்கு பிறகு சினிமாவிற்குள் வந்தாலும் சூப்பர் ஸ்டாரின் படம் மூலம் எண்ட்ரியாகியிருக்கிறார் என்று தான் சொல்லவேண்டும்.

அதே வேளையில் இவரின் மெர்குரி படம் வரும் ஏப்ரல் 13 ம் தேதி வெளியாக இருந்தது. ஆனால் சினிமா ஸ்டிரைக் காரணமாக படம் வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இது அவருக்கு மட்டுமல்ல படத்தில் நடித்த ரம்யா நம்பீசன், பிரபு தேவா, இந்துஜா ஆகியோருக்கும் வருத்தம் தான். ஆனால் படக்குழுவிற்கு தற்போது மகிழ்ச்சியான செய்தி கிடைத்துள்ளது.

திரில்லர் கதையான இப்படம் சர்வதேச திரைப்படவிழாவில் இடம் பெற்றுள்ளது. ஏப்ரல் 12 ல் அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடக்கும் திரைவிழாவில் வரும் இப்படத்தில் Silence is the most powerful scream என விளம்பர வாசகம் இடம் பெற்றுள்ளதாம்.

logo