Header

அட சும்மா கலாய்ங்கண்ணா- பிரபல நடிகருக்கு பெர்மிஷன் கொடுத்த தளபதி விஜய்

விஜய் மிகவும் எளிமையானவர், எல்லோரிடத்திலும் அன்பாக பழகக்கூடியவர். இவர் நடிப்பில் கடைசியாக வந்த மெர்சல் செம்ம வசூல் செய்தது.

உலகம் முழுவதும் இப்படம் ரூ 250 கோடி வரை வசூல் செய்தது, இந்நிலையில் மெர்சல் படத்தில் விஜய்யுடன் ஒரு சில காட்சிகளில் யோகி பாபு நடித்திருப்பார்.

அதில் ஒரு காட்சியில் விஜய்யை தேடி சமந்தாவும், யோகி பாபுவும் வருவார்கள், அப்போது 5 ரூபாய் டாக்டர் யார் என்று கேட்க, அதற்கு விஜய் ஒரு விளக்கம் கொடுப்பார்.

அதற்கு யோகி பாபு ‘அப்போ அது நீ இல்ல, போப்பா’ என்று சொல்வார், இந்த வசனம் யோகி பாபுவே அந்த இடத்தில் சொன்னாராம்.

அட்லீக்கு இது நன்றாக இருக்கின்றதே என தெரிய, இதை விஜய் அண்ணாவிடம் எப்படி சொல்வது என்று தெரியாமல் இருந்துள்ளார்.

இதை கவனித்த விஜய் ‘அட நல்லா தான் இருக்கு, சும்மா கலாய்ங்கண்ணா’ என்று யோகி பாபுவிற்கு பெர்மிஷன் கொடுத்தாராம்.

logo