Header

இந்தியன் 2 படத்தில் இணைந்த முக்கிய விருது பெற்ற பிரபலம்!

கமல்ஹாசன் இயக்குனர் சங்கருடன் மீண்டும் இந்தியன் 2 படம் மூலம் கூட்டணி சேரவுள்ளார். இதற்கான அறிவிப்புகள் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போதே வெளியானது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.

படப்பிடிப்பு எப்போது துவங்கும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால் சங்கர் ரஜினியை வைத்து இயக்கியுள்ள நடித்துள்ள 2.0 படத்தில் தொழிநுட்ப வேலைகள் மிகவும் நுணுக்கமாக நடைபெற்று வருகிறது.

இது முடிவடைய இன்னும் நீண்ட நாட்கள் தேவைப்படுவதாலேயே படம் அடுத்தமாதத்திலிருந்து நாள் குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் ரசிகர்களுக்கு வருத்தம் தான்.

தற்போது புதிய இப்படத்தில் வசனம் எழுத லட்சுமி சரவணக்குமார் ஒப்பந்தமாகியுள்ளாராம். கதைகள், நாவல்கள் எழுதிவரும் இவர் கடந்த 2016 ல் கானகன் என்ற தன் நாவலுக்கு சாகித்திய அகாடமி விருது பெற்றுள்ளார்.

மேலும் காவியத்தலைவன், அரவான் ஆகிய படங்களில் பணியாற்றியுள்ளாராம்.

logo