Header

சசிகுமாரின் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வந்த உறவினர் தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது

இயக்குனரும் நடிகருமான சசிகுமாரின் கம்பெனி பிரோடக்ஷன்ஸ் நிறுவனத்தை கவனித்து வந்தவர் அவரின் உறவினர் அசோக் குமார்.

அசோக் இன்று தன் வீட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். கடன் கொடுத்தவர் தொடர்ந்து மிரட்டி வந்ததால் அசோக் வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

அவர் கைப்பட எழுதிய கடிதம் தற்போது சிக்கியுள்ளது. அதில் அவர் எழுதியிருப்பதாவது..

“எனக்கு சசிகுமார் கடவுளைவிட சிறந்த முதலாளியாக இருந்தார். எனக்கு எல்லா சுதந்திரமும், அதிகாரம் கொடுத்தார். நான் கம்பெனியை கடனில் நிறுத்தியுள்ளேன். சசிக்கு நல்லது மட்டுமே செய்யத் தெரியும், ஆனால், அவருக்கு யாரும் நல்லது செய்யவில்லை.

இதுவரை பத்து ஆண்டுகளில் எங்கள் எல்லா தயாரிப்புப் படங்களையும் சரியான தேதியில் வெளியிட்டோம், நாங்கள் செய்த பெரிய பாவம் அன்புச்செழியனிடம் கடன் வாங்கியது. வட்டி, வட்டிக்கு மேல் வட்டி என்று கடந்த ஏழு வருடங்கள் வாங்கியவர். கடந்த ஆறு மாதமாக மிகவும் கீழ்த்தரமாக நடத்த ஆரம்பித்தார். என் குடும்பத்தினரை தூக்கி விடுவதாக மிரட்டினார். யாரிடம் உதவி கேட்பது? அதிகாரவர்க்கம், அரசாங்கம் ஆள்வோரின் பெரும்புள்ளிகள், சினிமா அமைப்பின் தலைவர் என சகலரும் அவர் கையில். அவரை ஒன்றும் செய்ய முடியாது. கடவுளுக்கு அவரை தண்டிப்பது மட்டும் வேலை இல்லையே.

எனது உயிரினும் மேலான சசிகுமார், உன்னை இவர்கள் எல்லாம் சித்ரவதை பண்ணுவதை என்னால் சசிக்க முடியவில்லை. என்னை அவர்களிடமிருந்து மீட்பதற்கு திராணி இல்லாததால்தான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். என்னை மன்னித்துவிடு, நீ ரொம்ப நல்லவன், நீ நல்லா இருக்கணும். என் சாவை வைராக்கியமாக எடுத்துக் கொள். என்னைப் போல் நீ கோழை ஆகிவிடாதே. எத்தனையோ பேரை வாழவைத்த நீ கண்டிப்பாக நல்லபடியாக வாழ வேண்டும். இந்த சூழ்ச்சிக்காரர்களிடம் உன்னைவிட்டுப் போகிறேன். மன்னித்துவிடு சசி. என்னை நினைத்துப் பார்க்காதே. நீ நிறைய உழைத்திருக்கிறாய், நீ சுயம்பு என்னைக் காப்பாற்றாத கடவுள் உன்னையும் நமது குடும்பத்தையும் காப்பாற்றுவான். என்னால் சூழ்ச்சிக்காரர்களையும், ஈவு இரக்கமற்றவர்களையும் எதிர்கொள்ள முடியவில்லை,” என உருக்கமாக எழுதியுள்ளார் அசோக்குமார்.

logo