Header

சிவகார்த்திகேயன் எப்படிப்பட்ட ஒரு நடிகர்- நயன்தாரா சொன்ன விஷயம்

சிவகார்த்திகேயன், நயன்தாரா முதன் முதலாக ஜோடியாக இணைந்து வேலைக்காரன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். அண்மையில் வெளியான சில புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவர்களது ஜோடி மிகவும் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி வந்தனர்.

இந்த நிலையில் அண்மையில் ஒரு தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நயன்தாரா, சிவகார்த்திகேயனை பற்றி பேசியுள்ளார். அவர் கூறியதாவது, படப்பிடிப்பில் மிகவும் அமைதியாக இருப்பார்.

படத்தில் வசனங்கள் பல பக்கங்கள் இருக்கும். ஒரு நாள் இரவு 1,2 இருக்கும் அவருக்கு பல பக்கங்கள் கொண்ட வசனங்கள் கொடுத்தார்கள். அப்போது அவர் 10 நிமிடம் கொடுக்க முடியுமா என்று கேட்டு படித்துவிட்டு உடனே வந்து நடித்து முடித்துவிட்டார். சத்தியமாக 10 நிமிடத்தில் அவ்வளவு வசனங்களை பேசவே முடியாது, ஆனால் அவர் முடித்து விட்டார்.

சிவகார்த்திகேயன் மிகவும் திறமையானவர் என்று பேசியுள்ளார்.

  • https://cp12.serverse.com/proxy/vasanthamfm?mp=/stream
  • Vasantham FM