Header

பிக்பாஸில் ஒலிக்கும் கம்பீர குரல் இவருடையது தான்…? அம்பலமானது சீக்ரெட்!

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யார் என்பது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாபிக். பரபரப்பாக பஞ்சமே இல்லாமல் நகர்ந்து வரும் இந்த நிகழ்ச்சியின் பின்னால் இருந்து ஒலிக்கும் கம்பீர குரல் யாருடையது என்ற கேள்வி பலருக்கும் எழுந்திருக்கும்.

பிக்பாஸில் ஒலிக்கும் அந்த குரல் பிரபல டப்பிங் கலைஞரான கோபி நாயரின் குரல் என்று சமீபத்தில் வெளியான தகவலை கோபிநாயரே ஒரு பேட்டியில் மறுத்தார், அந்த குரல் தன்னுடையது இல்லை என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அம்புலி உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்தவரும் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்தவருமான கோகுல்நாத் தான் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னால் இருந்து குரல் கொடுத்து வருவதாக சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

logo