Header

அந்த படத்திற்காக எத்தனை வருடம் வேண்டுமானாலும் கால்ஷிட் தருவேன்- ஜெயம் ரவி

ஜெயம் ரவி தொடர்ந்து வித்தியாசமான கதைக்களத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். தனி ஒருவன், மிருதனை தொடர்ந்து தற்போது வனமகன் என்ற வித்தியாசமான கதைக்களத்தில் நடித்துள்ளார்.

இப்படம் அடுத்த வாரம் திரைக்கு வரவுள்ளது, இதற்கான ப்ரோமோஷனில் ஜெயம் ரவி மிகவும் பிஸியாகவுள்ளார்.

இந்நிலையில் சங்கமித்ரா படம் குறித்து பேசுகையில் ‘சங்கமித்ரா சுந்தர்.சி அவர்களின் கனவுப்படம், அப்படத்திற்காக எத்தனை வருடம் கால்ஷிட் கேட்டாலும் கொடுத்திருப்பேன்.

அந்த அளவிற்கு நல்லக்கதை அப்படம்’ என பெருமித்தத்துடன் கூறியுள்ளார்.

logo