Header

ஜீ.வி.பிரகாஷ் திடீர் பல்டி! விநியோகஸ்தர்கள் அதிர்ச்சி

பல மாதங்களாக பிரச்சனையில் மாட்டி தவித்துவரும் மொட்ட சிவா கெட்ட சிவா படம் தற்போது ஒருவழியாக தியேட்டரில் வெளிவருகிறது. படத்திற்கு எதிராக பைனான்சியர் தொடர்ந்த வழக்கும் திரும்பபெறப்பட்டுவிட்டது. அதனால் மார்ச் 9ம் தேதி படம் வெளியாவது உறுதியாகியுள்ளது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு கொஞ்சம் அதிகமாக இருப்பதால், இந்த படத்துடன் மோதவிருந்த படங்கள் திடீரெனெ தள்ளிப்போயுள்ளது.

‘எங்கிட்ட மோதாதே’ படத்தை மார்ச் 24-ந் தேதிக்கும், ஜீ.வி.பிரகாஷ் ‘புரூஸ்லீ’ படத்தை வருகிற மார்ச் 17-ந் தேதிக்கும் ஒத்திவைத்துள்ளனர்.

‘புரூஸ்லீ’ படம் சொன்ன தேதியில் வரும் என நினைத்திருந்த விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை தந்துள்ளது.

logo