Header

ஆஸ்கர் விழாவிற்கு வந்தவர்கள் ஏன் இந்த நீல நிற ரிப்பன் அணிந்திருந்தார்கள் தெரியுமா? கடும் எதிர்ப்பு

ஆஸ்கர் விருது விழா இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் தொடங்கியது. இதில் பல ஹாலிவுட் திரைப்பிரபலங்கள் கலந்துக்கொண்டனர்.

இந்நிலையில் விழாவிற்கு வந்த அனைவரும் தங்கள் உடையில் நீல நிற ரிப்பனை அணிந்திருந்தனர், பலரும் இவை எதற்கு என கேட்டனர்.

அது வேறு ஒன்றுமில்லை ஏழு இஸ்லாமிய நாடுகளிலிருந்து மக்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதித்த டிரம்ப்பின் உத்தரவை எதிர்த்து ஆஸ்கர் விழாவுக்கு வந்த பல கலைஞர்கள் தங்கள் ஆடையில் நீல ரிப்பனை அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

இவை பலராலும் வரவேற்கப்பட்டது, மேலும், ஒரு சில நடிகர்கள் தங்கள் எதிர்ப்பை வெளிப்படையாகவே கருத்துக்களாக கூறினர்.

logo