Header

டப்மாஷ் மிருனாளினிக்கு இப்படி ஒரு வாய்ப்பா?

டப்மாஷ் செய்தே சிலர் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் டப்மாஷ் மூலம் சமூக வலைத்தளங்களில் பிரபலமானவர் மிருனாளனி.

இவரை பலரும் சினிமாவில் நடிக்க அழைக்கின்றனர் என சில நாட்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறினார்.

தற்போது நகல் என்ற படத்தில் இவர் அறிமுகமாகவுள்ளார், இதை அவரே தன் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும், எங்கள் வீட்டில் சினிமாவில் நடிக்க அனுமதிக்கவில்லை, ஆனால் கௌதம் மேனன் சார் அழைத்தால் எப்படியாவது சம்மதம் வாங்கி நடிப்பேன் என இவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

logo