Header

சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றமளிக்கும் செய்தி

சிங்கம் படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பெரிய வெற்றி பெற்றதால், சூர்யாவின் S3 படத்திற்கு ரசிகர்களின் எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

டிசம்பர் 16ம் தேதி படம் வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் நவம்பர் 27ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டது.

ஆனால் தற்போது வந்துள்ள தகவல் என்னவென்றால், பிரமாண்ட விழா எதுவும் இல்லாமல் பாடல்களை நேரடியாக யூடியூபில் வெளியிடவுள்ளார்களாம். காரணம் சூர்யா தற்போது ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்திற்காக காரைக்குடியில் இருப்பதுதான்.

இந்த செய்தி சூர்யா ரசிகர்கள் மத்தியில் பெரிய ஏமாற்றத்தை தந்துள்ளது.