Header

மோடி திட்டத்தால் பிச்சைக்காரன் படக்குழுவினரின் மற்றொரு அதிரடி

தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன்.

மோடி நோட்டுகளுக்கு போட்ட தடைக்கு பின்னர், படங்களை வைத்து மீம்ஸ் வெளியிட தொடங்கிவிட்டனர் நெட்டிசன்கள்.

இதற்கு பின்னர் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கலாம் என மக்கள் மத்தியில் கருத்து நிலவி வந்தது.

அதற்கு வலுசேர்க்கும் முகமாக விஜய் ஆண்டனி, இந்த படம் தொடங்கிய போது இரண்டாம் பாகம் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஆனால் தற்போது ரசிகர்கள் பலரும் கேட்டு வருகின்றனர். அந்த படத்தின் குழு மீண்டும் செயற்பட்டு நல்ல முடிவு வரும் பட்சத்தில் 2018ம் ஆண்டு ரசிகர்கள் பிச்சைக்காரன் 2 படத்தை எதிர்பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் பிச்சைக்காரன் படத்தின் மூலம் பிரதமர் மோடிக்கு கருத்து சொன்னதை போல 2ஆம் பக்கத்திலும் இன்னொரு கருத்து இருந்தால் நல்லது.