Header

இளையராஜாவின் இசையை சுட்டுவிட்டென், அது எங்கள் சொத்து, பிரேம்ஜி கருத்து!

தொழில் அதிபர் வசந்த்தின் மூத்தமகன் விஜய் வசந்த் நடித்து, இரண்டாம் மகன் வினோத் தயாரிக்கும் அச்சமின்றி படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில் இயக்குனர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

இப்படத்திற்கு இசை அமைத்துள்ள பிரேம்ஜி பேசிய போது நான் இப்படத்திற்கு இசை அமைக்க எனது பெரியப்பாவின் மெட்டுகளை சுட்டு போட்டுள்ளேன். பாடல்களை அவரிடம் காண்பித்த போது அவராலேயே கண்டுபிடிக்கமுடியவில்லை. அவரின் இசையை காப்பி அடிக்க எங்கள் குடும்பத்திற்கு மட்டும் தான் உரிமை உண்டு. இன்று யார் யாரோ அவரது இசையை காப்பியடிக்கிறார்கள் என கூற பலரும் வியந்து பார்த்தார்கள்.

இப்படத்தில் சிருஷ்டி டாங்கே ஜோடியாக நடிக்க சரண்யா பொன்வண்ணன் ராதாரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

logo