Header

விஜய் வாழ்க்கையையே மாற்றிய நாள்- என்ன தெரியுமா?

இளைய தளபதி விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால், அவரின் கடின உழைப்பே அதற்கு காரணம். இவர் ஒரு சில வருடங்களுக்கு முன் தொடர்ந்து அழகிய தமிழ் மகன், குருவி, வில்லு, சுறா, வேட்டைக்காரன் என 5 தோல்வி படங்களை கொடுத்தார்.

எல்லோரும் விஜய் அவ்வளவு தான் என்றார்கள், அதன்பிறகு நடித்த வேலாயுதம், காவலன், நண்பன் படமும் பெரிய பெயரை இவருக்கு பெற்று தரவில்லை.

ஆனால், இதே நாள் 4 வருடத்திற்கு முன் வந்த துப்பாக்கி விஜய்யின் திரைப்பயணத்தே திருப்பி போட்டது, ரஜினி படத்திற்கு பிறகு இப்படி ஒரு வசூலை விஜய் மட்டுமே சந்தித்தார். முதன் முறையாக முருகதாஸுடன் கூட்டணி அமைத்த விஜய் ரூ. 100 கோடி கிளப்பில் இந்த படத்தின் மூலம் இடம்பிடித்தார்.

இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ 70 கோடி வரை வசூல் செய்து பிரமாண்ட வசூல் செய்தது. இப்படம் வெளிவந்து 4 வருடங்கள் ஆகியதை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.