Header

இருமுகன் 3 நாள் பிரமாண்ட வசூல், ’ஐ’க்கு பிறகு விக்ரம் படைத்த சாதனை

விக்ரம் நடிப்பில் ஐ படம் தான் கடைசியாக வசூலை வாரி குவித்தது. இப்படம் உலக அளவில் ரூ 240 கோடி வசூல் செய்திருந்தது.

தற்போது இவர் நடிப்பில் வெளிவந்துள்ள இருமுகன் 3 நாட்களில் உலகம் முழுவதும் ரூ 30 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாம்.

இதில் தமிழகத்தில் மட்டுமே ரூ 15 கோடி வசூல் செய்துள்ளது, இப்படத்தின் பட்ஜெட், வந்த விமர்சனங்கள் எல்லாம் வைத்து பார்க்கையில் இவை அதிக வசூல் தான் என கூறப்படுகின்றது.

logo