Header

35 வயதுக்குட்பட்ட கோடீஸ்வரர்களில் முதலிடம் பிடித்த பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க்

உலகின் இளம்வயது கோடீஸ்வரர்களை பட்டியலிடும் ‘வெல்த் எக்ஸ்’ நிறுவனம் இவ்வாண்டின் 35 வயதுக்குட்பட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூக்கர்பர்க்-குக்கு முதல் இடம் அளித்துள்ளது.

41.6 பில்லியன் அமெரிக்க டாலர்களுடன் இந்த பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ள மார்க் ஸூக்கர்பர்க்-குக்கு அடுத்தபடியாக, இதே பேஸ்புக்கின் இணை நிறுவனரான டஸ்ட்டின் மாஸ்கோவிட்ஸ் 9.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் இரண்டாம் இடத்திலும், மற்றொரு இணை நிறுவனரான எடுவார்டோ சாவரின் 5.3 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளுடன் நான்காம் இடத்திலும் வரிசைப்படுத்தப்பட்டுள்ளனர்.

25 வயதிலேயே 1.9 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துகளை சம்பாதித்துள்ள ‘ஸ்னாப்சாட்’ நிறுவனரான ஏவான் ஸ்பீகல் இந்த பட்டியலில் மிக குறைவான நபராக இடம்பெற்றுள்ளார்.

20 பிரபலங்களின் பெயரை கொண்ட ‘டாப்-20’ பட்டியலில் 6 பெண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளனர். இதில் சீனாவைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான கன்ட்ரி கார்டன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகிக்கும் ஹுய்யான் யாங்(34), 5.9 கோடி டாலர் மதிப்பிலான சொத்துகளுக்கு சொந்தக்காரராக முதலிடம் பிடித்துள்ளார்.

logo