Header

நடு வானில் திறந்துகிடந்த விமானத்தின் கதவு: திகிலுடன் பயணித்த பயணிகள் (வீடியோ இணைப்பு)

மலேசியாவில் விமானத்தின் பின்பக்கம் கதவு திறந்திருந்தவாறு பயணிகள் பயணித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலேசியாவின் லாவால் நகரத்தில் இருந்து வட திசையிலுள்ள மற்றோரு பகுதிக்கு விமானம் சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தின் பின் பக்கத்தில் உள்ள கதவு பூட்டப்படாமல் இருந்துள்ளது.

இதையடுத்து விமானம் தரையிறங்குவதற்கு முன்னர் நடுவானில் கதவு திறந்துள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் விமானத்தின் முன் பக்கத்தில் இருந்த பயணிகள் இது குறித்து எந்த அச்சமும் இல்லாமல் பயணித்துள்ளனர்.

விமானத்தின் பின் பகுதியில் பயணம் செய்த 11பயணிகள் திகிலுடன் பயணித்ததாகவே தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து விமானத்திற்கு சொந்தமான நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

logo