
இரண்டாம் உலகம்’ படத்தில் இணைந்து நடித்த ஆர்யா, அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் மீண்டும் இணைகின்றனர். ஏற்கனவே இருவருக்கும் காதல் என்ற பேச்சு உள்ள நிலையில் மறுபடியும் இணைந்திருப்பதால் இருவருக்குமான நெருக்கம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. குண்டுப் பெண்ணாகவும் பின்னர் பயிற்சி மூலம் எடையை குறைத்து மெலிந்த தேகம் கொண்டவராகவும் இருவித தோற்றத்தில் அனுஷ்கா நடிக்கிறார்.
அவருக்கு பயிற்சி தரும் மாஸ்டராக ஆர்யா வேடம் ஏற்றிருக்கிறார். சமீபத்தில் இருவரும் நடித்த நெருக்கமான காதல் காட்சி படமாக்கப்பட்டது. இதுதொடர்பான விஷயம் லேசாக கசிந்துள்ளது. அனுஷ்காவுக்கு ஆர்யா உதட்டில் முத்தம் கொடுத்த 2 நிமிட காட்சி ரகசியமாக படமாக்கப்பட்டதாம். சமூதாயத்தில் பெண்களின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்தும் கதையாக இதன் கரு அமைக்கப்பட்டிருக்கிறதாம். –