Header

ரஜினி இல்லைன்னா அஜீத் சித்திக் ‘கறார்’

தமிழில் ‘ப்ரண்ட்ஸ்’, ‘எங்கள் அண்ணா’, ‘காவலன்’ உட்பட சில படங்களை இயக்கியவர், மலையாள இயக்குனர் சித்திக்.
தற்போது இவர் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்ற படத்தை இயக்கினார். இது சூப்பர் ஹிட்டாகியுள்ளது. எனவே, இதன் ரீமேக் உரிமையை வாங்க பலர் போட்டி போடுகின்றனர்.
இது பற்றி சித்திக் கூறியதாவது:இதன் கதையை இந்தி உட்பட பல மொழிகளில் ரீமேக் செய்யக் கேட்டு பலர் வந்தனர். நான் கொடுக்க மறுத்து விட்டேன். ‘பாடிகார்ட்’ படத்தை தமிழில் ‘காவலன்’ என்றும், இந்தியில் அதே பெயரிலும் இயக்கினேன். அங்கும் ஹிட்டானது. அதுபோல் இப்படத்தையும் மற்ற மொழிகளில் நானே இயக்க உள்ளேன்.
தமிழில் ரஜினி அல்லது அஜீத், இந்தியில் அக்‌ஷய் குமார், தெலுங்கில் வெங்கடேஷ் நடித்தால் நன்றாக இருக்கும். இந்தக் கதை அவர்களுக்கு  சரியாகப் பொருந்தும். எனவே, இது சம்பந்தமாக  நான் அவர்களிடம் பேச உள்ளேன்.இவ்வாறு கூறினார்.

You may also like...

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Thank you for taking time to Vote for us at BestWeb.lk 2020

logo