Header

தொடர்ந்து படங்கள் தோல்வி மோகன்லால் புது முடிவு

அடுத்தடுத்து தனது படங்கள்  தோல்வி அடைவதால், திரைக் கதை  திருப்தியாக இருந்தால் மட்டுமே இனிமேல் நடிப்பது என்று முடிவு செய்து இருக்கிறார், மோகன்லால்.
கடந்த 2013ம் ஆண்டு மோகன்லால் நடிப்பில் வெளியான படம், ‘த்ரிஷ்யம்’. இப்படம் சூப்பர் ஹிட்டானது. இப்படத்துக்குப் பிறகு மோகன்லால் நடிப்பில் வந்த ‘கீதாஞ்சலி’, ‘மிஸ்டர் பிராடு’, ‘கூதரா’, ‘பெருச்சாழி’, ‘ரசம்’, ‘என்னும் எப்போழும்’, ‘லைலா ஓ லைலா’ ஆகிய ஏழு படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்தன. இதன் காரணமாக வெறுப்பில் இருக்கும் மோகன்லால், இனி வருடத்தில் ஒரு படத்தில் மட்டுமே நடிக்க முடிவு செய்துள்ளார். அதுவும் திரைக்கதை திருப்தியாக இருந்தால் மட்டுமே அட்வான்ஸ் வாங்குவது என்று முடிவு செய்துள்ளார்.
இப்போது ‘கனல்’ என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார்.

logo