
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தயாரிக்க உள்ள முதல் படத்துக்கு ‘99 பாடல்கள்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், படங்கள் தயாரிப்பதற்காக, ஒய்எம் மூவிஸ் என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இதில் புதியவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்கள் உருவாக்க திட்டமிட்டு இருந்தார்.
அதன்படி இப்போது இசைக் கலைஞரும், நாடக நடிகருமான விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் படத்தை தயாரிக்கிறார். இசை தொடர்பான இந்தப் படத்துக்கு ‘99 சாங்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தி, தமிழில் தயாராகும் இந்தப் படத்துக்கு தமிழில் ‘99 பாடல்கள்’ என்று டைட்டில் வைக்க இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. ‘இதன் ஷூட்டிங் விரைவில் தொடங்க இருக்கிறது. புதுமுகங்கள் நடிக்கிறார்கள். அதற்கான தேர்வு நடந்து வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் பாடல் வேலைகளை ஏற்கனவே ஆரம்பித்து விட்டார்’ என்று, படக் குழுவினர் தெரிவித்தனர்.