அடுத்த மாதம் அறிமுகமாகின்றது விண்டோஸ் 10

மைக்ரோசொப்ட் நிறுவனம் 7 வகையான சாதனங்களுக்கான இயங்குதளங்களை ஒரே நேரத்தில் முதன் முறையாக வெளியிடவுள்ளது.

இதேவேளை விண்டோஸ் எனும் பெயரை தாங்கி வரவுள்ள இறுதி இயங்குதளமாக விண்டோஸ் 10 உள்ளதாக கடந்த வாரங்களில் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்நிலையில் இவ் இயங்குதளமானது எதிர்வரும் ஜுலை மாதம் வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் இயங்குதளத்தில் விண்டோஸ் 8 இயங்குதளத்தில் நீக்கப்பட்டிருந்த Start Button மீண்டும் தரப்பட்டுள்ளதுடன், மேலும் பல புதிய அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன் உலகெங்கிலும் உள்ள 190 நாடுகளில் வசிக்கும் 1.5 பில்லியன் மக்கள் விண்டோஸ் இயங்குதளத்தினையே பயன்படுத்திவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo