விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரட்டை வேடமா?

No Rating
DtJGWxvU0AAW_m4

‘தல’ அஜித்குமார் – சிவா கூட்டணியின் நான்காவது படமான விஸ்வாசம் வரும் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இணையத்தில் படத்தின் புதிய புகைப் படங்கள் மற்றும் மோஷன் போஸ்டர் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை மாறாக ஒரு கதாப்பாத்திரம் இரு கெட்டப்பில் வருகிறார் என நம்பத்தகுந்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இளம் கெட்டப்பில் வரும் அஜித் தேனி மாவட்டத்தை சுற்றியும், சற்று வயதான கெட்டப் மும்பை பகுதியை சுற்றியும் காட்சிகள் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

முழுக்க முழுக்க நகைச்சுவை, சென்டிமென்ட் என அணைத்து தரப்பினரையும் கவரும் வகையில் மாஸாக உருவாகியுள்ளது விஸ்வாசம். மேலும், டி. இமான் இசையில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெற்றுள்ளது. அதில் 2 பாடல்கள் தரலோக்கல் குத்து பாடலாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. சத்யஜோதி தயாரித்துள்ள இப்படத்தில் நயன்தாரா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

Tags

0 thoughts on “விஸ்வாசம் படத்தில் தல அஜித் இரட்டை வேடமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song