இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா

No Rating
1208679_surya-wallpapers-images-photos (1)

 

சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

மணிகண்டன் மரணம் அடைந்தது குறித்து அறிந்த சூர்யா அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சேலத்திற்கு தனியாக காரில் சென்றார். பகலில் சென்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் இரவு 10 மணி போன்று மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். மணிகண்டனின் மகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா இந்த குடும்பம் இனி என் குடும்பம், உங்களின் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

மணிகண்டனை இழந்துவிட்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று கவலையில் இருந்த அவரின் மனைவிக்கு சூர்யாவின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளது. சூர்யாவின் இந்த செயல் அவர் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.

Tags

0 thoughts on “இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song