தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு

No Rating
maxresdefault

றத்மலானை, ஞானேந்திர பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தெஹிவளை – கல்கிஸ்ஸ மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இலங்கை கிரிக்கட் அணியின் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை என்று தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் நேற்று இரவு 08.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மூன்று பேர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் தனஞ்சய டி சில்வாவின் தந்தை உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை தகவல் தெரியவில்லை என்று பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இதேவேளை தந்தையின் உயிரிழப்பு காரணமாக மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இடம்பெற உள்ள கிரிக்கட் தொடரில் இருந்து தனஞ்சய டி சில்வா விலகியுள்ளார்.

Tags

0 thoughts on “தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song