பத்திரிக்கையாளராக மாறிய வரலட்சுமி

No Rating
Hot-actress-Varalakshmi-Sarathkumar-exposes-man-who-misbehaved-with-her

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர்ஸ்டார் என்றால் அது நயன்தாரா தான் என பலரும் கூறுவார்கள். அவர் மட்டும்தான் சமீப காலமாக ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் நடித்து வருகிறார். சென்ற வருடம் வெளிவந்த அறம் படம் அதில் குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்நிலையில் தற்போது நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் ஒரு படத்தில் கமிட் ஆகியுள்ளார். அவர் ஏற்கனவே விஜய்62 படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துவரும் நிலையில் தற்போது வெல்வெட் நகரம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

“சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மற்றும் சென்னையில் நடைபெற்ற வெவ்வேறு உண்மை சம்பவங்களை தழுவி ஆக்சன் திரில்லராக உருவாக்கப்பட்ட படம் தான் ‘வெல்வெட் நகரம் ’. இதன் திரைக்கதை 48 மணி நேரத்தில் நடைபெறுவது போல் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கிறது.”

“இதில் மதுரையில் களப்பணியாற்றும் பத்திரிக்கையாளராக வரலட்சுமி நடித்திருக்கிறார். கொடைக்கானலில் வசிக்கும் பழங்குடி இன மக்களுக்கு இழைக்கப்பட்ட ஒரு அநீதிக்கான ஆதாரத்தைத் தேடியும், அதன் முழு பின்னணியையும் பற்றி துப்பறிவதற்காக மதுரையிலிருந்து சென்னைக்கு வருகிறார் வரலட்சுமி. இங்கு அவர் சந்திக்கும் எதிர்பாராத சம்பவங்களை விறுவிறுப்பான ஆக்சன் கலந்து சொல்லும் படமாக ‘வெல்வெட் நகரம் ’ தயாராகியிருக்கிறது” என இயக்குனர் மனோஜ்குமார் நடராஜன் கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “பத்திரிக்கையாளராக மாறிய வரலட்சுமி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song