விஜய் ஆண்டனிக்கு புதிய சிக்கல் – காளி படத்திற்க்கு திடீர் தடை

No Rating
vijay-antony-1

இசையமைப்பாளராக இருந்து தற்போது ஹீரோவாக ஜொலித்து வருகிறார் விஜய் ஆண்டனி. அவர் நடிக்கும் படங்கள் நல்ல வசூலும் ஈட்டி வருகின்றன.

அவர் அடுத்து காளி என்ற படத்தில் நடித்து வருகிறார். கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள இந்த படத்தில் அஞ்சலி, சுனைனா உள்ளிட்டோர் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த படத்திற்கு கோர்ட் இடைக்கால தடை விதித்துள்ளது. அண்ணாதுரை பட நஷ்டத்தை வழங்காமல் காளி படத்தை திரையிட தடை விதிக்கக்கோரி அலெக்சாண்டர் என்பவர் தொடர்ந்த வழக்கில் இவ்வாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

செலுத்தவேண்டிய பாக்கி தொகையான 4.73 கோடி ரூபாய் செலுத்தினால் படம் வெளியாக தடை நீங்கிவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Tags

0 thoughts on “விஜய் ஆண்டனிக்கு புதிய சிக்கல் – காளி படத்திற்க்கு திடீர் தடை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song