விசுவாசம் படத்தில் இருந்து யுவன் விலகிவிட்டாரா? ரசிகர்கள் அதிர்ச்சி

No Rating

தல அஜித் மீண்டும் சிவா இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்திற்கு விசுவாசம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் ஷூட்டிங் இந்த மாதம் துவங்கி, தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

யுவன் ஷங்கர் ராஜா தான் இசையமைப்பாளர் என படத்தின் பூஜை புகைப்படத்தை வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் அறிவித்தது.

தற்போது யுவன் விசுவாசம் படத்திலிருந்து விலகிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை. படக்குழுவிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியிடப்படவில்லை.

மங்காத்தா கூட்டணி மீண்டும் இணைந்ததால் சந்தோஷத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு இந்த செய்தி கொஞ்சம் அதிச்சியளித்துள்ளது.

Tags

0 thoughts on “விசுவாசம் படத்தில் இருந்து யுவன் விலகிவிட்டாரா? ரசிகர்கள் அதிர்ச்சி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song