ரஜினி இந்த 3 சவால்களில் கவனமாக இருக்க வேண்டும் – வைரமுத்து பேச்சு !

No Rating
61586405

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாள். கடந்த 20ஆண்டுகால ரசிகர்களின் கேள்விக்கு விடையளித்துள்ளார். அவர் அரசியலுக்கு வருவது உறுதி செய்து வருகிற பாராளுமன்ற தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி தனித்து போட்டிபோடவுள்ளதாக அறிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு அரசியல் களத்தில் மிகப்பெரும் பேச்சாக நிலவி வருகிறது. இந்நிலையில் இன்று ரஜினியின் நெருங்கிய நண்பர் கவிஞர் வைரமுத்து ரஜினி அரசியல் பிரவேசத்தை பற்றி பத்திரிக்கையாளரிடம் பேசினார் அதில் ” ரஜினி அரசியலுக்கு வரும் அறிவிப்பை நண்பராக நான் வரவேற்கிறேன்.

அவரின் அரசியல் பற்றி இரண்டு விஷயங்களை பார்க்கமுடிகிறது. ஒரு பக்கம் வாழ்த்துக்கள் வந்தாலும் மறுபக்கம் அதிகம் வசைச்சொற்கள் விழுகிறது. ரஜினி சொல்லியிருக்கும் இந்த கால அவகாசம் அவருக்கு மிகவும் முக்கியம். ஒரு அரசியல் காட்சி தொடங்காவதற்கு முன் மிக முக்கியமான 3விஷயங்கள் பின்பற்ற வேண்டும் , அது ரஜினிக்கும் பொருந்தும், முதலில் தன்னுடைய எதிரி யார் என்று தெளிவாக முடிவு செய்ய வேண்டும், இரண்டாவது மற்றவர்கள் சாதிக்க தவறியதை, தான் சாதிக்க போவதை திட்டவட்டமாக ஒரு கொள்கை அடிப்படையில் மக்களுக்கு அறிவிக்க வேண்டும், மூன்றாவது இந்த கொள்கையை வரைமுறைப்படுத்தி செயல்முறைக்கு கொண்டு செலுத்துவதற்கு சிறந்த சிந்தனையாளராகவும் தேவை, அவர்களை தன பக்கம் வைத்துக்கொள்ள வேண்டும் .

இந்த மூன்று விஷயத்தில் காலஅவகாசம் எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும் என்று ரஜினியிடம் நான் எதிர்பார்க்கிறேன் என கூறினார்

Tags

0 thoughts on “ரஜினி இந்த 3 சவால்களில் கவனமாக இருக்க வேண்டும் – வைரமுத்து பேச்சு !”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song