சினிமாவை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால் – அதிர்ச்சியில் ரசிகர்கள்

No Rating
kajal-aggarwal-800x450

பரத் நடித்த பழனி படத்தின் மூலம் தமிழ்திரையுலகிற்கு அறிமுகமானவர் காஜல் அகர்வால்.குறுகிய காலகட்டத்திலேயே ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்ட காஜல் அகர்வால் தற்போது தனக்கென ஒரு ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார்.நயன்தாராவிற்கு அடுத்தபடியாக அதிகப்படியான ரசிகர்களை கொண்ட நடிகை இவர்தான்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான அஜித்,விஜய் போன்ற பிரபல நடிகர்களுடன் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார்.இவ்வாறு ரசிகர்கள் மனதை கொள்ளையடித்து கொண்டிருக்கும் காஜல் தற்போது ஒரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இன்னும் சில படங்களுக்கு பின் நடிப்பை முழுமையாக விட்டுவிடபோவதாக வெளியிட்டுள்ள் அறிவிப்பு தான் அது.அதாவது நடிப்பை விட்டுவிட்டு வேறு தொழிலுக்கு செல்லவிருப்பதாகவும், அப்படி சென்று விட்டால் மீண்டும் திரையுலகில் பிரவேசம் செய்யமாட்டேன் எனவும் நடிகை காஜல் அகர்வால் கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில் சினிமா நிரந்தரமானது அல்ல என கூறியுள்ள காஜல்,நடிகைகள் எப்போதும் சினிமாவில் நடித்துகொண்டிருப்போம் என நினைக்கிறார்கள் என்றூம் ஆனால் மார்க்கெட் போய்விட்டால் என்ன செய்வது என்றூம் கேள்வியை முன்வைத்துள்ளார்.அதனால்தான் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் காஜல் அகர்வால் தெரிவித்துள்ளார்.

Tags

0 thoughts on “சினிமாவை விட்டு விலகும் நடிகை காஜல் அகர்வால் – அதிர்ச்சியில் ரசிகர்கள்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song