அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்!

No Rating
dc519843b44521c9c6d03f0b0e75d342

நடிகை ராய் லட்சுமி தமிழ், தெலுங்கு, ஹிந்தி என படங்களில் நடித்து வருபவர். அவர் நடிப்பில் விரைவில் ஜூலி 2 வரவுள்ளது. இது குறித்து பேசியவர் நான் இப்படத்தில் படு கிளாமராக நடித்துள்ளேன் என்கிறார்கள்.

டீசரை பார்த்து அப்படி முடிவெடுத்து விட்டார்கள். ஆனால் படத்தில் என் கதாபாத்திரம் பரிதாபமானது. சமீபகாலமாக சினிமாவில் பாலியல் புகார்கள் அதிகரித்து விட்டது. எனக்கும் மறைமுகமாக அப்படி ஒரு அனுபவம் வந்தது.

அட்ஜஸ்ட் செய்யும்படி கூறினார்கள். ஆனால் நான் ஒத்துக்கொள்ளவில்லை. ஒரு வேளை அதற்கு ஓகே சொல்லியிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருக்கலாம் என கூறியுள்ளார்.

நயன்தாரா தான் தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்பது பலருக்கும் தெரியும். எதற்காக அவர் இப்படி குறிப்பிட்டார் என்பது அவருக்கே தெரியும். ஆனால் இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tags

0 thoughts on “அட்ஜஸ்ட் பண்ணியிருந்தால் லேடி சூப்பர் ஸ்டார் ஆகியிருப்பேன்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song