பாகுபலி ஸ்டண்ட் முயற்சி செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி (வீடியோ உள்ளே)

No Rating
_15d2163a-fb16-11e6-ab12-d7625b180dd1

ராஜமௌலி இயக்கிய பாகுபலி படம் ஸ்டண்ட், சிஜி ஆகியவற்றிக்காக பெரிதும் பேசப்பட்டது. தற்போது கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் குடிபோதையில் பாகுபலியில் வருவது போல யானை மீது ஏறி நிற்கும் ஸ்டண்டை முயற்சித்து, அதை பேஸ்புக்கில் லைவ் செய்துள்ளார்.

முதலில் யானைக்கு பழங்கள் கொடுத்து அதனிடம் நெருங்க ஆரம்பித்தார், பின்னர் அதன் தந்தங்களை பிடித்து ஒரு முறை முத்தம் கொடுத்தார்.

இரண்டாவது முறை அதனிடம் சென்று அதை திரும்ப செய்ய முயன்ற அவரை யானை முட்டி தள்ளியது. பல மீட்டர்கள் தள்ளி விழுந்த அவர் கழுத்து பகுதியில் பலத்த அடி ஏற்பட்டு மயக்கமான நிலையில் இருந்தார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அந்த நபர் யார் என்று தெளிவாக தெரியாத நிலையில் அதற்கான தேடலும் தற்போது துவங்கியுள்ளது.

Tags

0 thoughts on “பாகுபலி ஸ்டண்ட் முயற்சி செய்த இளைஞருக்கு நேர்ந்த கதி (வீடியோ உள்ளே)”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song