ஆப்பிளின் Spaceship Campus இன் புதிய தோற்றம் வெளியானது

No Rating
APPLE-2017

ஆப்பிள் நிறுவனமானது மிகவும் பிரம்மாண்டமான கட்டடத்தொகுதி ஒன்றினை கடந்த சில வருடங்களாக நிர்மாணித்து வருகின்றது.

Spaceship Campus எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த தொகுதியில் பல்வேறு அமைப்புக்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் அமைக்கப்பட்டு வரும் Spaceship Campus தொடர்பில் குறித்த கால இடைவெளியில் வீடியோக்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்பேது மற்றுமொரு வீடியோவை வெளியிட்டுள்ளது.

இந்த வீடியோவில் புனரமைப்பு பணிகள் நிறைவடைந்த பல பகுதிகள் காட்டப்பட்டுள்ளதுடன் Steve Jobs Theater உட்பட பல அம்சங்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இங்கு ஏற்கனவே ஆப்பிளின் சில பணியாளர்கள் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர்.

இதேவேளை சுமார் 12,000 பணியாளர்களுக்கான தங்குமிட வசதி உட்பட அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக இந்த Spaceship Campus உருவாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags

0 thoughts on “ஆப்பிளின் Spaceship Campus இன் புதிய தோற்றம் வெளியானது”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song