ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பின்னால் தெரியாத விசயம்! தெரியுமா உங்களுக்கு

No Rating
maxresdefault (1)

இளையதளபதி விஜய் நடித்துள்ள மெர்சல் தான் ரசிகர்களுக்கு இப்போதைய ஸ்பெஷல். விஜய் இப்படத்தில் மூன்று கெட்டப்பில் நடிப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என்ற கருத்துக்கள் இருந்து வருகிறது. நேற்று வெளியான ஆளப்போறான் தமிழன் என்ற மெர்சல் படத்தின் பாடல் வெளியானது.

இது குறித்து பாடலாசிரியர் விவேக் பத்திரிக்கைக்கு பேட்டியளித்துள்ளார். இதில் அவர், மெர்சல் படத்தில் 5 பாடல்கள் உள்ளது. இதில் முதலாவதாக எழுதப்பட்ட பாடல் ஆளப்போறான் தமிழன்.

5 மாதங்களுக்கு முன்பே எழுதப்பட்டது. தமிழ் பற்றிய பாடல் இருக்கவேண்டும் என்றதால் ரஹ்மான், அட்லீயும் ஓகே சொல்லிவிட்டனர். இந்த பாடல் ரஹ்மான் சாரின் ஸ்டூடியோவில் வைத்து எழுதினேன்.

தமிழனுக்கு பொறுமை, உழைப்பு அதிகம். எல்லாத்துறைகளிலும் சாதிப்பதன் பெருமையை சொல்வதற்காகவே இந்த பாடல்.விஜய் சாருக்கு இப்படி ஒரு பாடல் படத்தில் இருப்பது தெரியாது.

அவர் ஜல்லிக்கட்டுக்காக பேசிய வீடியோவை நினைத்து தான் பாடல் எழுதினேன். பாடலை கேட்டுவிட்டு விஜய் சார் வாழ்த்தி மகிழ்ந்தார். அப்படியே தமிழ் உணர்வை இந்த பாடல் ஊட்டுகிறது என்று விஜய் சொல்லியதாக பேசியுள்ளார் விவேக்.

Tags

0 thoughts on “ஆளப்போறான் தமிழன் பாடலுக்கு பின்னால் தெரியாத விசயம்! தெரியுமா உங்களுக்கு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song