ஆரவ்வின் பர்சனல் பக்கங்கள்..! – சைத்தான் இயக்குநரின் ஷேரிங்

No Rating
aarav-bigg-boss

சைத்தான் படத்துக்குப் பிறகு, இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘சத்யா’. சிபிராஜ் ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்திருக்கும்  நிலையில், படத்தை பற்றி ஒரு ஊடகத்துக்கு பேட்டியளித்துள்ளார்.

‘சைத்தான் படம் ரிலீஸாவதற்கு முன்பாகவே ‘சத்யா’ படத்தின் வாய்ப்பு என்னைத் தேடி வந்தது. சைத்தான் படத்துக்குப் பின்பு, எனது ஸ்க்ரிப்ட்டில் ஒரு படம் பண்ணலாம் என்று நினைத்தேன். ஆனால், விஜய் ஆண்டனி கேட்டுக்கொண்டதால் ‘ஷணம்’ படத்தின் ரீமேக்கை தமிழில் பண்ணினேன். இந்தப் படத்தை சிபிராஜ் என்னைப் பார்க்கச் சொன்னார். பார்த்தவுடன் எனக்குப் பிடித்திருந்தது. சிபிக்குக் கண்டிப்பாக இந்தப் படம் ஒரு பேர் சொல்லும் படமாகயிருக்கும்.
ரம்யா நம்பீசனை ‘சைத்தான்’ படத்திலேயே நடிக்க வைக்க முயற்சி பண்ணினேன். அந்த நேரத்தில் கால்ஷீட் பிரச்னை காரணமாக அவரால் நடிக்க முடியவில்லை. அதனால்தான் ‘சத்யா’ படத்தில் அவரை நடிக்க வைத்தேன். ‘ஷணம்’ படமும் ‘சத்யா’ படமும் காமெடியில் வேறுபடும். மற்றபடி திரைக்கதையின் சுவாரஸ்யம் குறையாமல் இந்தப் படத்தை எடுத்துள்ளோம்” என்றவரிடம், ‘சைத்தான்’ படத்தில் நீங்கள் அறிமுகப்படுத்திய ஆரவ் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருப்பது உஅங்களுக்குத் தெரியுமா என்று அந்த ஊடகம் அவரிடம் கேள்வியெழுப்பியது

ஆரவ் உண்மையான பெயர் ‘நபிஸ்’. இந்தப் பெயரை ஆரவ் என்று மாற்றியதும் அவன்தான். ‘நான் நபிஸ் பெயரே நன்றாகத்தானே இருக்கு’ என்றேன். இல்லை சார், ‘ஆரவ் என்றே இருக்கட்டும் என்று சொன்னார். மேலும், கண்டிப்பாக ஆரவ், ஓவியா காதலுக்கு ஓகே சொல்ல மாட்டார் என்றுதான் நினைக்கிறேன். ஆரவ் இந்நேரம் வெளியில் நடக்கும் சில விஷயங்களைக்கூட கணித்திருப்பார். கமல் சார் வந்து பேசுவதைக் கண்டிப்பாக உன்னிப்பாகக் கவனித்திருப்பார். அதற்கேற்ப அவர் நடந்துகொள்வார். ஆரவ் ரொம்ப புத்திசாலியான பையன். அவனுக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தெரியும். அவன் எப்போதும் அவன் லிமிட் தாண்டி நடந்துகொள்ள மாட்டான்” என்று முடித்தார் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி.

 

Tags

0 thoughts on “ஆரவ்வின் பர்சனல் பக்கங்கள்..! – சைத்தான் இயக்குநரின் ஷேரிங்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song