மீண்டும் மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது சாம்சுங்!

No Rating
Galaxy-folder

சில வருடங்களுக்கு முன்னர் Flip கைப்பேசிகள் எனப்படும் மடிக்கக்கூடிய கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.

இவற்றுக்கு மக்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு காணப்பட்டது.

இவ்வாறிருக்கையில் மீண்டும் இவ்வாறான ஒரு கைப்பேசியினை சாம்சுங் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது.

SM-G9298 எனும் தொடரிலக்கத்தில் இக் கைப்பேசி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதில் 4.2 அங்குல அளவு, 1920 x 1080 Pixel Resolution உடைய Full HD திரை காணப்படுகின்றது.

தவிர Qualcomm Snapdragon 821 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM, 64GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

இவற்றுடன் 12 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களுக்கான கமெரா, NFC தொழில்நுட்பம் மற்றும் Samsung Pay வசதி என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

Tags

0 thoughts on “மீண்டும் மடிக்கக்கூடிய கைப்பேசியினை அறிமுகம் செய்கின்றது சாம்சுங்!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song