வெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி

பிக்பாஸ் பார்த்தவர்கள் அனைவருமே நேற்று பரணி மீது மிகுந்த அனுதாபம் கொண்டனர். ஏனெனில் அவரை எல்லோரும் சேர்ந்து ஒதுக்க, அவர் வீட்டை விட்டு ஓடும் நிலைக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில் பிரபல பத்திரிகை அவரை தொடர்பு கொண்டு பேசுகையில் ‘நான் தற்போது நன்றாக இருக்கிறேன், என்னை பார்க்காமல் குழந்தைகளுக்கு உடல்நிலையே சரியில்லை.
என்னை பார்த்ததும் சந்தோஷத்தில் துள்ளி குதித்தனர், மேலும், காலை முருகன் கோவிலுக்கு சென்றேன்.
பலரும் வந்து என்னை நலம் விசாரித்தார்கள், சந்தோஷமாக இருந்தது, பிக்பாஸில் என்ன நடந்தது என்பது குறித்து 100 நாட்களுக்கு பேசக்கூடாது என்று கூறிவிட்டனர், அதனால் தற்போதைக்கு விடைபெறுகிறேன்’ என்று கூறியுள்ளார்.
100 நாட்கள் எந்த ஒரு செய்தியையும் வெளியே சொல்லக்கூடாது என்பது அக்ரீமெண்டில் இருக்க, அனுயா, கஞ்சா கருப்பு, ஸ்ரீ தற்போது பரணி வரை பேச மறுக்க, ஏதோ உள்ளே நடக்கின்றது என்றே ரசிகர்களுக்கு நினைக்க தோன்றும்.
-
Previous மணிரத்னத்தின் அடுத்தப்படம், 6-வது முறையாக இணையும் பிரபலம்
-
Next ரகுமான் குறித்த சர்ச்சைக்கு சிம்பு அதிரடி பதில்
0 thoughts on “வெளியே வந்த பரணி பிக்பாஸ் குறித்து பரபரப்பு பேட்டி”