வடிவேலுவுடன் நடித்தவர்களின் இன்றைய கதி என்ன தெரியுமா?? சிரிக்க வைத்தவர்கள் அழுகிறார்கள் வறுமையில்!!

No Rating
1280x720-wEI (1)

அது ஒரு கனாக்காலம். வடிவேலு நடித்த படம் என்றாலே.. குடும்பம் சகிதமாக கூட்டம், கூட்டமாக தியேட்டர்களுக்கு மக்கள் வந்தார்கள். குறிப்பாக குழந்தைகளுக்கு வடிவேலு படம் தான் இங்கு ஹாரிபாட்டர் படம். ஒரு நாளை இருபது லட்சம் வரை சம்பளம் வாங்கினார் என்றெல்லாம் கூறுவார்கள்.

அவரோடு ஒரு பெரிய காமெடிப் பட்டாளமே நடித்தது. அவர்கள் வீடுகளில் ஒவ்வொரு நாளும் வடிவேலு பெயர் சொல்லியே உலை வைத்தார்கள். தீபாவளி,பொங்கல், ரம்ஜான்,கிருஸ்துமஸ் என எல்லாமே வடிவேலு பெயரைச் சொல்லி கொண்டாடினார்கள் அந்தக் குடும்பத்தினர். ஓய்வே இல்லாமல் வடிவேலு நடித்தது போலவே அவருடன் சேர்ந்து நடித்த டீமும் படு பிஸியாக இருந்தார்கள்.

வடிவேலு நல்ல சம்பளமும் வங்கிக் கொடுத்து கூடவே வைத்து அவர்களை பராமரித்தார். சிலர் கூடவே இருந்து குழி பறித்தார்கள். சிலர் விசுவாசமாக இருந்தார்கள். கொண்டல்ராவ், அல்வா வாசு, கிருஷ்ணமூர்த்தி, சிங்கமுத்து, போண்டா மணி, கிரேன் மனோகர், ஷாம், விஜய் கிருஷ்ணா, என அது ஒரு பெரிய வட்டம்.

வடிவேலு படம் என்றால் இவர்கள் இல்லாமல் இருக்காது. கொண்டலராவ் ஸ்டன்ட் அடி ஆளாக இருந்து வயதாகி வடிவேலுவைப் பார்த்து கண்ணீர் சிந்த, அவரை கூடவே வைத்து நடிகர் ஆக்கினார்.

போண்டா மணி துக்காடா கேரக்டர்கள் செய்தவரை உலகமே அறியச் செய்தவர் வடிவேலு. எல்லாம் ஒரு ஆறேழு வருடங்கள் தான். ஒரு அரசியல் கட்சியால் வடிவேலு சினிமாவில் இருந்து ஒதுக்கப்பட்டு வீட்டில் அடைந்தார். கூடவே இருந்த காமெடி நடிகர்கள் திக்குமுக்காடிப் போனார்கள்.

என்ன செய்வது என்று தெரியவில்லை. துவண்டு போனார்கள். பெரிய வசதியும் இல்லை. வந்த பணத்தை சேமிக்கவும் இல்லை. இப்போது வறுமையின் கோரப் பிடியில் மீண்டும் வாய்ப்புக் கேட்டு அலைகிறார்கள்..!

Tags

0 thoughts on “வடிவேலுவுடன் நடித்தவர்களின் இன்றைய கதி என்ன தெரியுமா?? சிரிக்க வைத்தவர்கள் அழுகிறார்கள் வறுமையில்!!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song