முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2 ! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்

No Rating
Kamal-Hassan-Pardaphash-108073-1

தமிழ் சினிமா மட்டுமில்லாது உலகின் பிற நாடுகளில் இருக்கும் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த ஒரு படம் விஸ்வரூபம். கமல் இயக்கி நடித்த இப்படத்தின் முதல் பாகம் சில தடைகளால் தாமதமாக 2013 ல் வெளியானது.

பின் இரண்டாம் பாகம் அந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கமல் மற்றும் தயாரிப்பாளர் இருவரிடையே பிரச்சனை மூண்டது. இதனால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

ஆனால் விஸ்வரூபம் 2 ற்கான சில காட்சிகளை கமல் ஏற்கனவே முடித்திருந்த நிலையில் 4 வருடங்களுக்கு பின் தற்போது அப்படத்தின் ஷூட்டிங்கை கமல் துருக்கி நாட்டில் தொடங்கியுள்ளார்.

மீத மிருக்கும் சில காட்சிகள் சென்னையில் எடுக்கப்பட்ட பின் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் இந்த ஆண்டின் இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

0 thoughts on “முடிவுக்கு வந்த விஸ்வரூபம் 2 ! களத்தில் குதித்தார் கமல்ஹாசன்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song