ஜூன் 30ஆம் திகதி முதல் வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிப்பு

No Rating
WhatsApp-Android-e1441334577402

வாட்ஸ் அப் சமூகவலைதளம் வரும் ஜூன் 30ஆம் திகதி முதல் குறிப்பிட்ட செல்போன் மொடல்களில் செயல்படாது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகளவில் அதிக மக்கள் உபயோகப்படுத்தும் வாட்ஸ் அப் செயலி வரும் 30ஆம் திகதி முதல் பிளாக்பெர்ரி 10, பிளாக்பெர்ரி ஓ.எஸ்., நோக்கியா S40, நோக்கியா S60 உள்ளிட்ட செல்போன்களில் செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது கடந்த ஆண்டே அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதனால் பிளாக்பெர்ரி நிறுவனத்துக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் என கூறப்பட்டதால் ஜூன் 2017 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

பழைய ஓ.எஸ்-களை கொண்ட செல்போன்கள் எதிர்காலத்தில் தங்கள் பயன்பாட்டின் அம்சங்களை விரிவாக்குவதற்கு தேவையான திறன்களை வழங்காது என்பதால் வாட்ஸ்அப் நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு வாட்ஸ் அப் வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Tags

0 thoughts on “ஜூன் 30ஆம் திகதி முதல் வாட்ஸ் அப் செயல்படாது என அறிவிப்பு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song