உடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்

No Rating
maxresdefault (1)

கே.பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சுந்தரகாண்டம் போன்ற படங்களில் அறிமுகம் ஆனவர்கள் அந்த இரட்டை காமடியன்கள் சகாதேவன் மகாதேவன்.

குறுகிய காலத்தில் புகழ் அடைந்தது போல போலவே குறுகிய காலத்தில் உடல் எடையும் அதிவேகமாக கூடிக் கொண்டே வந்தது.

ஆனால் அது மரபு ரீதியானது என்று மருத்துவர்கள் கூறியதால் இவர்களின் எடையை குறைக்க முடியவில்லை.

ஆனாலும் உறவுப் பெண்களை திருமணம் செய்து சூலைமேடு பகுதியில் ஒன்றாகவே வசித்து வந்தார்கள்.

ஆனால் மூத்தவர் சகாதேவன் உடல் எடை மிக அதிகமாகி நடக்கவே இயலாத நிலையில் வீட்டில் முடங்கினார்.

சகாதேவன் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு மாரடைப்பு ஏற்பட்டு உடல் வீங்கி அகால மரணம் அடைந்தார்.

இந்த நிலையில் அவரது மற்றொரு சகோதரரான மகாதேவனும் உடல் எடை கூடிக் கொண்டே இருந்தது.

சர்க்கரை நோயால் அவதிப்பட்டு வந்த மகாதேவன் அதற்கான சிகிச்சையும் பெற்று வந்திருக்கிறார்.

காலில் புண் வர அது ஆறாமல் சீல் வைத்து மிக மோசமான முறையில் பாதிக்கப் பட்டு கதறினார். பின்னர் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்றார்கள்.

அவரது வலது கால் அகற்றப்பட்டது. அப்படி அகற்றிய போது நர்ஸ் உட்பட யாராலும் அருகே நிற்க முடியவில்லையாம். எல்லோரும் ஓடி விட்டார்கள்.

அதன் பின் இரண்டே நாட்களில் துடிதுடித்து பரிதாபமாக இறந்து போனார் மகாதேவன். நூறு படங்களுக்கும் மேல் நடித்த மகாதேவன் இறந்த போது திரையுலகம் கண்டு கொள்ளவே இல்லை. ஓரிரு நடிகர்களே வந்தார்கள் என்கிறார்கள்.

மறைந்த மகாதேவனுக்கு சாந்தி என்ற மனைவியும், அன்பரசி (16) என்ற மகளும் உள்ளனர்.

அப்பா போலவே உருவமும் முகமும் இருப்பதால் அன்பரசியும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.

Tags

0 thoughts on “உடம்பெல்லாம் வெடித்து..மருத்துவமனையே கதறிய ஒரு காமெடி நடிகர் மரணம் : கொடூரம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song