பாகுபலிக்கு பின் ராஜமௌலியின் ராஜ தந்திரம் இது தானா?

No Rating
baahubali-the-conclusion-masterp-1

பாகுபலி இன்று ரூ.1000 கோடி வசூலை தாண்டி உலக சாதனை படைத்துள்ளது. இதில் நடித்த ஒவ்வொருவருக்கும் நல்ல பெயர் கிடைத்துவருகிறது.

காரணம் கதாபாத்திரத்தோடு அவர்கள் ஒன்றிப்போனதே காரணம். இது ஒரு புறமிருந்தாலும் ஒரு டீம் லீடராக அனைவரையும் நன்கு வேலைவாங்கியுள்ளார்.

இரண்டு தொடர்களாக ஐந்து வருடங்கள் எடுக்கப்பட்ட இப்படத்தில் நடிகர், நடிகைகள் யாருக்கும் சலிப்பு தட்டிவிடக்கூடாது என அவர் உறுதியாக இருந்தாராம்.

முக்கிய காட்சிகளை படமாக்கிய பின் அதை கிராஃபிக்ஸில் அப்படியே உருவாக்கி பிரபாஸ், ரானா, அனுஷ்கா போன்றவர்களுக்கு ரகசிய சர்ப்பிரைஸ் கொடுப்பாராம் ராஜமௌலி.

இதனால் பிரம்மிப்பாகும் அவர்கள் ஆர்வம் குறையாமல் அப்படியே தொடர்ந்து நடிப்பார்களாம். மேலும் பிரபாஸ், ராணாவின் பிறந்தநாளுக்காக ஸ்பெஷல் போஸ்டரெல்லாம் வெளியிட்டு அவர்களை குஷிப்படுத்தினாராம்.

ராஜ தந்திரம் போல சரியான ஆளுமையை கடைபிடித்ததும் பாகுபலியின் வெற்றிக்கு முக்கிய காரணம். இந்திய சினிமாவிற்கு தனி அடையாளம் காட்டியவரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

Tags

0 thoughts on “பாகுபலிக்கு பின் ராஜமௌலியின் ராஜ தந்திரம் இது தானா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song