கூடுவிட்டு கூடு பாய குடும்பத்தாரை கொலை செய்த இளைஞரின் கொடூர செயல்..!

No Rating
manthiravathi001.w540

கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பரிசோதிக்க இளைஞர் ஒருவர் தன் குடும்பத்தினர் 4 பேரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலத்தை சேர்ந்த ராஜா தங்கம் என்பவருக்கு, ஜான் பாத்திமா என்ற மனைவியும், ஜான்சன் ராஜா என்ற மகனும், கரோலின் என்ற மகளும் உள்ளனர்.

ஜான்சன் தன் குடும்பத்தினருடன் அதிகம் பழகாமல் பில்லி சூனியம் போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது தாய், தந்தை, சகோதரி மற்றும் லலிதா என்னும் உறவினர் ஆகியோரை ஜான்சன் கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் இரத்த கறை பட்ட கத்தியை தண்ணீரில் கழுவி ஆதாரம் இல்லாமல் மறைத்துள்ளார். இதனிடயில், சில தினங்களுக்கு முன்னர் ஜான்சன் ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்த போது அவர் மீது சந்தேகபட்ட போலீஸார் அவரை விசாரித்துள்ளனர்.

அப்போது அவர் தன் குடும்பத்தினரை கொலை செய்தததையும், அதற்கான காரணத்தையும் போலீஸிடம் கூறியுள்ளார்.

இது குறித்து விளக்கம் அளித்த போலீஸார் , ஜான்சன் ராஜா சாத்தான் வழிபாடு மூலம் கூடு விட்டு கூடு பாயும் வித்தையை பயிற்சி செய்துள்ளார். அதற்காக தன் குடும்பத்தினர் நால்வரை ஒருவர் பின் ஒருவராக கொலை செய்துள்ளார்.

ஜான்சனுக்கு மனநோய் இருப்பதாக சந்தேகப்படும் போலீஸார், இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

0 thoughts on “கூடுவிட்டு கூடு பாய குடும்பத்தாரை கொலை செய்த இளைஞரின் கொடூர செயல்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song