அம்மா சாயலா? அப்பா சாயலா? கண்டறிய உதவும் ஆப்

No Rating
pr_source

ஸ்மார்ட் போன்கள் வருகை தற்போது அதிகரித்து உள்ளது. அதற்கேற்ப பயனாளர்களும் கணிசமாக உயர்ந்து வருகின்றனர்.

ஸ்மார்ட் போன்களில் பயன்படும் ஆப்ஸ்களின் வாயிலாக ஷொப்பிங் முதல் பேங்கிங் வரை தற்போது அனைத்தினையும் செய்ய இயலும்.

அந்த வரிசையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஆப்ஸ் தான் நாம் அப்பாவின் சாயலா அல்லது அம்மாவின் சாயலா என அறிய உதவும் லைக் பேரண்ட்(Likeparent).

தாய்லாந்தினை சேர்ந்த மவுல்சோன் சாட்சுவான் எனும் மென்பொருளாளர் தான். இதுவரை இவர் 78 செயலிகளை உருவாக்கியுள்ளார்.

இந்த ஆப்-ல் தாங்கள் அப்பாவின் சாயலா, அம்மாவின் சாயலா என அறிய விரும்புபவர் இந்த ஆப்பில் தனது போட்டோவினையும் தனது அப்பா அம்மாவின் போட்டோவினையும் பதிவேற்ற வேண்டும்.

பின்னர், அப்பா அம்மாவின் போட்டோவை ஒப்பிட்டு நாம் யார் சாயலில் உள்ளோம் என்பதை கூறுகிறது. துல்லியமாக கூறவில்லை என்றாலும் அனைவருக்கும் பிடித்தமான சுவரஸ்யமான ஐடியாவினை கொண்டுள்ளதால் 10இலட்சத்திற்கும் மேற்பட்டோர் இதை தங்களின் மொபைல்களில் பதிவேற்றம் செய்துள்ளதால் டாப் 10 ஆப்-களின் இடத்தில் இடம் பெற்றுள்ளது.

Tags

0 thoughts on “அம்மா சாயலா? அப்பா சாயலா? கண்டறிய உதவும் ஆப்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song