திருட்டு விசிடி கும்பலின் ஆட்டத்தை அடக்கியது இப்படித்தான், சொல்கிறது S3 படக்குழு

No Rating
Singam-3-S3-First-Look-Stills-1

தமிழ் சினிமாவின் அழிவிற்கு மிகப்பெரிய காரணம் புதிய படங்களை முதல் நாளே திருட்டுத்தனமாக எடுத்து வெளியிடும் ஒரு தளம் தான். இதை யாராலும் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நடிகர் விஷால் மட்டுமே தொடர்ந்து இதற்கு குரல் கொடுத்து வருகிறார், தற்போது முன்னணி நடிகர்களின் ரசிகர்களே இந்த தளங்களுக்கு ரிப்போர்ட் அடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சிங்கம்3-யை முதல் நாளே வெளியிடுவேன், இது எங்கள் நாள் என்று அந்த தளம் கூறியது.

ஆனால், இப்படம் முதல் நாள் வரவே இல்லை, இரண்டாவது நாள் தான் திருட்டு ப்ரிண்ட் வெளிவந்தது.

இதுக்குறித்து இந்த படக்குழு கூறுகையில் ‘இணையம் இருந்தால் மட்டுமே படத்தைக் காண முடியும். ISP(Internet Service Provider)-யிடம் அந்த தளம் உள்ளிட்ட இணையங்களின் பெயர்களைக் கொடுத்துவிட்டோம். இந்தியாவுக்குள் அனைத்து இணையங்களையும் நிறுத்தச் சொல்லிவிட்டோம், அதனால், தான் அவர்களால் முதல் நாள் படத்தை வெளியிட முடியவில்லை’ என்று கூறியுள்ளார்.

Tags

0 thoughts on “திருட்டு விசிடி கும்பலின் ஆட்டத்தை அடக்கியது இப்படித்தான், சொல்கிறது S3 படக்குழு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song