உயிரையே வைத்திருந்த தங்கைக்கு உயிர்கொடுத்த சிறுமி பரிதாபமாக பலி! இங்கிலாந்தில் சம்பவம்..!

No Rating
6_iman_accident_1.w540

விபத்தொன்றில் தனது மூன்று வயதுத் தங்கையை துணிச்சலுடன் மீட்ட 11 வயதுச் சிறுமி லொறியொன்றில் நசுங்கிப் பலியான சம்பவம் இங்கிலாந்தின் ரொச்டேல் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இமான் ஜாவேத்(11) என்ற இந்தச் சிறுமி, தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் பிரதான வீதியொன்றில் காரில் பயனித்துள்ளார். பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால், அவர்களது காருக்குப் பின்னால் வந்த மற்றொரு கார் இவர்களது கார் மீது மோதியுள்ளது. மோதிய வேகத்தில் வீசுப்பட்ட இமானின் கார் கடுமையாகச் சிதைந்துபோயுள்ளது.

அதிலிருந்து அவரது தாயும், மூத்த சகோதரியும் மிகுந்த சிரமத்தின் மத்தியில் வெளியேறினார்கள். காருக்குள் இருந்த இமான், தனது மூன்று வயதுத் தங்கை வெளியேற முடியாமல் தவிப்பதைக் கண்டு, அவளை பத்திரமாக வெளியேற்றியுள்ளார்.

பின்னர், காரிலிருந்து இமான் வெளியேற முயற்சித்தபோது, பின்னால் வந்த லொறியொன்று மீண்டும் இமானின் காரில் மோதியது. இதில், இமான் பலியாகியுள்ளார். இமானின் தந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

தன் தங்கை மீது இமான் உயிரையே வைத்திருந்தாள் என்று கூறும் இமானின் தாய், இமானின் கடைசிச் செயல் தன் தங்கை உயிரைக் காப்பாற்றியதே என்று கூறிக் கலங்குகிறார்.

Tags

0 thoughts on “உயிரையே வைத்திருந்த தங்கைக்கு உயிர்கொடுத்த சிறுமி பரிதாபமாக பலி! இங்கிலாந்தில் சம்பவம்..!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song