விஜய் பற்றி இசையமைப்பாளர் இமான் சொன்னது என்ன தெரியுமா?

No Rating
1501

இளைய தளபதி விஜய் இன்று சினிமாவில் பாக்ஸ் ஆபீஸ் மன்னன் என்பதை மீண்டும் தன் பைரவா படத்தின் மூலம் நிரூபித்து விட்டார்.

தற்போது அட்லீ இயக்கும் விஜய் 61 படத்திலும் கமிட்டாகியுள்ளார். இவர் பற்றி இசையமைப்பாளர் இமான் தன் அனுபவங்களை ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

விஜயிடம் எனக்கு மிகவும் பிடித்தது செய்யக்கூடிய வேலையை 100 சதவீதம் சிறப்பாக செய்ய வேண்டும் என்கிற அவரின் எண்ணம், செயல்பாடு தான் என அவர் கூறியுள்ளார்.

இவர்கள் இருவரும் ஜில்லா படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர். அதில் கண்டாங்கி பாடலை விஜய் மற்றும் ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார்கள்.

அந்த பாடல் முதலில் ஸ்ரேயா வைத்து டேக் எடுக்கப்பட்டது. பின் விஜயிடம் அதை கொடுத்ததும் அவர் அதை கேட்டுவிட்டு அவங்க நல்லா பாடிருக்காங்க.

நான் எப்படி அதுல பாடறது என தயங்கினாராம். பின் இமானின் தூண்டுதலால் விஜய் பாடி முடித்தாராம்.

இரவில் இமானுக்கு கால் செய்து பாட்டு உங்களுக்கு ஓகே யா. இல்லனா வேற யாராவது வச்சு எடுத்துக்கலாம் அண்ணா என் சொன்னாராம் விஜய்.

இமான் கம்போஸ் செய்துவிட்டு காண்பித்தும் விஜய்க்கு பிடித்திருந்ததாம். விஜய் இந்த குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என் இமான் கூறினார்.

Tags

0 thoughts on “விஜய் பற்றி இசையமைப்பாளர் இமான் சொன்னது என்ன தெரியுமா?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song