கிழங்குப் பொரியல் முழுவதையும் உட்கொண்ட காதலனை கத்தியால் குத்திய பெண்

No Rating
finger-chips

தனது காதலர் கிழங்குப் பொரியல் (சிப்ஸ்) முழு­வ­தையும் உட்­கொண்­டு­விட்டார் என்ற ஆத்­தி­ரத்தில் காத­லரை பெண்­ணொ­ருவர் கத்­தியால் குத்­திய சம்­பவம் பிரிட்­டனில் இடம்­பெற்­றுள்­ளது.

லன்­கா­ஷயர் பிராந்­தி­யத்தின் பிளக்பர்ன் நகரைச் சேர்ந்த 34 வய­தான டியென் மார்­கரெட் கிளேட்டன் எனும் பெண், தனது காதலர் சிமோன் ஹில் சகிதம் தனது நண்பர் ஒரு­வரின் வீட்­டுக்குச் சென்­றி­ருந்தார்.

அவ் ­வீட்டில் தம் இரு­வ­ருக்கும் வழங்­கப்­பட்ட கிழங்குப் பொரியல் முழு­வ­தையும் தனது காதலர் உட்­கொண்­டமை தொடர்­பாக அவ­ருடன் டியென் வாக்­கு­வா­தத்தில் ஈடு­பட்டார்.

இந்த வாக்­கு­வாதம் முற்­றியநிலையில், காதலர் சிமோன் ஹில்லை, டியென் கத்­தியால் குத்­தினார். இதனால் சிமோன் ஹில்லின் தோளில் காயம் ஏற்­பட்­டது.

அவ்­ வே­ளையில் டியென் மது­போ­தையில் இருந்தார் எனவும் நீதி­மன்றில் தெரி­விக்­கப்­பட்­டது. இவ் ­வ­ழக்கை விசா­ரித்த நீதி­மன்றம் டியென் மார்­க­ரெட்­டுக்கு 26 வார சிறைத் தண்டனை விதித்து கடந்த வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்துள்ளது.

Tags

0 thoughts on “கிழங்குப் பொரியல் முழுவதையும் உட்கொண்ட காதலனை கத்தியால் குத்திய பெண்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

SoundCloud

Vote for Your Favorite Song